இப்படித்தான் 18 கிலோ எடை குறைத்தேன் - ரகசியம் உடைத்த நடிகை ஷ்ரத்தா
எடை குறைத்தது குறித்து நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மனம் திறந்துள்ளார்.
நடிகை ஷ்ரத்தா
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு, உடற்பருமணோடு போராடி வந்த அவர் 18 கிலோ வரை குறைத்திருக்கிறார்.

இதுபற்றி தன்னுடைய சமீபத்திய பேட்டியில் பேசியுள்ள அவர், “என் முதல் சர்வதேச விடுமுறை சுற்றுலாவில் அப்போது நான் இருந்தேன். சட்டத்துறையில் பணிபுரிய ஆரம்பித்து 1 வருடம் ஆகியிருந்தது. பலரும் கனவு காணும் ஒரு வேலையிலிருந்தேன்.
அந்த வேலையில் நல்ல சம்பளம், ஜாலியான வாழ்க்கை முறை, உணவு, உடை, வெளியே செல்வது, திரைப்படங்கள் பார்ப்பது, நீங்கள் என்னவெல்லாம் சொல்வீர்களோ அதெல்லாம் நானும் செய்தேன்.
எடை குறைப்பு
அப்போது நான் உடல் பருமனின் உச்சத்திலிருந்தேன். மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே உடற்பயிற்சி செய்யும் அளவுதான் எனக்கு உற்சாகம் இருந்தது.
யோசிக்காமல் மகிழ்ச்சியாக நிறைய சாப்பிட்டேன். என் தொடைகள் மற்றும் கைகளின் எடை அதிகமானதையும் பொருட்படுத்தாமல் நினைத்த உடையை அணிந்தேன். எந்த தருணத்திலும் நான் அழகாக இல்லை என்று நினைத்ததே இல்லை. மற்றவர்களை விடத் தாழ்வாக உணர்ந்ததும் இல்லை.
முதலில் 5 நிமிடங்கள், பிறகு 15 நிமிடங்கள், ஒரு கட்டத்தில் ஓய்வின்றி என்னால் 40 நிமிடங்கள் முழுமையாக ஓட முடிந்தது. அடுத்து ஐந்து வருடங்கள் இதை தொடர்ந்து செய்தேன். இதனால் 18 கிலோ எடை வரை குறைத்தேன்” என்ற சீக்ரெட்டை தெரிவித்துள்ளார்.