Maturity குறைவான TN அரசியல்வாதிகள்..! ஒருத்தருக்கு ஒரு துறையையே குறை சொல்லக்கூடாது - அண்ணாமலை!!
ED அதிகாரி லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைதான நிலையில், அது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
ED அதிகாரி கைது
மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்த அங்கித் திவாரி என்பவர் திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இந்த கைதை தொடர்ந்து மதுரை ED அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 13 மணிநேரம் வரை நீடித்த இந்த சோதனையானது இன்று காலை நிறைவு பெற்றுள்ளது.
Maturity இல்லாதவர்கள்
இதற்கிடையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இது குறித்து பேசும் போது, "ஒரு மனிதன் தவறுசெய்ததற்கு ஒட்டுமொத்த அமலாக்கத்துறையே தவறு என்று சொல்லிவிட முடியாது என்றார்.
தமிழக காவல்துறையில் யாரோ ஒருவர் தவறு செய்ததற்காக மொத்த காவல்துறையையும் மோசம் என்று சொல்ல முடியாது என கூறிய அண்ணாமலை, தவறு செய்துள்ள அமலாக்கத்துறை அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை எனக்கூறினார்.
மேலும், இதனை அரசியலாக பார்க்கக்கூடாது என்றும் ஆனால் அது அரசியல்வாதிகளுக்கு புரியாது என்ற அவர், தமிழக அரசியலில் மெச்சூரிட்டி குறைவான அரசியல்வாதிகளே உள்ளனர்." என விமர்சித்தார்.