பாரதிய ஜனதாவா..? லஞ்ச ஜனதாவா..? அமைச்சர் மனோ தங்கராஜ் !!
ED அதிகாரி லஞ்சம் பெற்ற விவகாரத்தில் கைதாகி இருக்கும் சூழலில், இதில் மத்திய பாஜக அரசை விமர்சித்துள்ளார் அமைச்சர் மனோ தங்கராஜ்.
ED அதிகாரி கைது
மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்த அங்கித் திவாரி என்பவர் திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இந்த கைதை தொடர்ந்து மதுரை ED அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 13 மணிநேரம் வரை நீடித்த இந்த சோதனையானது இன்று காலை நிறைவு பெற்றுள்ளது.
மனோ தங்கராஜ் விமர்சனம்!!
கைதான இவர், நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் முதல் இந்த செய்தியே முதன்மையானதாக இருந்து வரும் நிலையில், இது குறித்து தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ED அலுவலர்கள் லஞ்சம், உள்துறை அலுவலகம் ஊழல், சி.ஏ.ஜி. அறிக்கையில் 7.5 லட்சம் கோடி இமாலய ஊழல்.. என்ன இது? BJP - பாரதீய ஜனதா பார்டியா? Bribery Janatha Party யா? என வினவியுள்ளார்.
ED அலுவலர்கள் லஞ்சம், உள்துறை அலுவலகம் ஊழல், சி.ஏ.ஜி. அறிக்கையில் 7.5 லட்சம் கோடி இமாலய ஊழல்.. என்ன இது? BJP - பாரதீய ஜனதா பார்டியா? Bribery Janatha Party யா?#CorruptedBJP_ED #BJP_BriberyJanathaParty#Corrupted_ED #Corruptionkingmodi
— Mano Thangaraj (@Manothangaraj) December 2, 2023