சீமானின் அறிவுரை - இவர்களை எதிர்க்கவேண்டியதில்லை - கூட்டணிக்கு அடித்தளமா..?
நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தமிழ்நாடு அரசியல் களத்தில் வளர்ந்து வருகின்றதே தேர்தலுக்கு தேர்தல் நம்மால் காணமுடிகிறது.
நாம் தமிழர் கட்சி
2016-ஆம் ஆண்டு முதல் தேர்தலில் அரசியலில் தீவிரம் காட்டி வரும் நாம் தமிழர் கட்சி தற்போது வரையில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்பதை ஆணித்தரமாக தெரிவித்துள்ள நிலையில், இனியும் கூட்டணி என்பதிலும் உறுதியாக உள்ளது.
அவர்களின் பிரதான எதிர்ப்பு கட்சியாக இருப்பது திமுக தான். மாநிலத்தில் திமுக என்பதில் தீவிரம் காட்டும் நாம் தமிழர் மத்தியில் என்றால் தங்கள் கோட்பாட்டிற்கு எதிராக உள்ள இரண்டு பாஜக - காங்கிரஸ் கட்சியையும் தொடர்ந்து எதிர்த்து தான் வருகின்றது.
யாரு'னு தெரிஞ்சிக்கோங்க
தமிழ்நாட்டில் இருக்கும் மற்ற பிற கட்சிகளான மதிமுக, பாமக, விசிக போன்ற கட்சிகளை சேர்ந்தவர்களை கடந்த சில களமாகவும், நாம் தமிழர் விமர்சிக்கும் போக்கு அவ்வப்போது வெளிப்பட்டு கொண்டே தான் இருக்கின்றது.
இந்நிலையில், இது குறித்து கட்சி மேடை ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மேடை ஏறும் போது திருமாவளவன், வைகோ, ராமதாஸ் போன்றோரை விமர்சிக்கும் போக்கை கைவிடும் படி கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், யாருக்கு எதிராக நாம் வந்துள்ளோம் என்பதை நன்கு புரிந்து கொள்ளவேண்டும் என்றும் அவர் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். சீமான், இக்கட்சிகளை குறித்து இவ்வாறு பேசியிருப்பது அவர் கூட்டணிக்கு அடித்தளமிடுகிறாரா..? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.