இனி தினமும் ஒரு தடையாவது நீங்க சிரிச்சே ஆகணும் !! அதிரடியாக வந்த சட்டம் - இப்படி ஒரு நூதன பின்னணியா?
ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது சிரிக்க வேண்டும் என ஜப்பான் நாட்டு அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது
சிரிப்பு
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்ற பழமொழியே உள்ளது. அந்தளவிற்கு சிரிப்பின் முக்கியத்துவம் உள்ளது. அதிகரித்து வரும் சமூக, வேலை நெருக்கடிகளின் காரணமாக நம்மில் பலரும் சிரிப்பதையே மறந்து விட்டோம்.
வாய் விட்டு சிரிக்கும் அளவிற்கான படங்களும் வெளிவருவது குறைந்து விட்டது. வந்தாலும்,அப்படங்களை பெரும்பாலும் மக்கள் ரசிப்பதில்லை. ஆனால், சிரிப்பு என்பது நமது மனதில் ஏற்படும் அழுத்தத்தை குறைத்து மனதில் புது உற்சாகம் உண்டாக தூண்டும்.
சட்டம்
இப்படிப்பட்ட நிலையில் தான், ஜப்பான் நாட்டில் புதிய சட்டமொன்று நடைமுறைக்கு வந்துள்ளது. அதாவது, இரு நபர் ஒரு நாளைக்கு ஒரு வாட்டியது கண்டிப்பாக சிரித்திட வேண்டுமாம்.
அந்நாட்டின் யமகட்டா என்ற மாகாணத்தின் பல்கலைக்கழகம் 40 வயதுக்கு அதிகமான 17,152 பேரிடத்தில் நடத்திய ஆய்வில் தினமும் மனம் விட்டு சிரிப்பது இதய நோய் உண்டாவதை குறைப்பதாக தெரிவிக்கிறது.
மன அழுத்தம், பதற்றம் போன்றவையும் இதன் காரணமாக குறைவது கண்டறியப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி முடிவை கொண்டு தான் அம்மாகாணத்தில் மக்கள் தினமும் ஒரு முறையாவது சிரிக்க வேண்டும் என சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல, நாட்டின் பிற மாகாணங்களில் ஒவ்வொரு மாதத்தின் எட்டாவது நாள் சிரிப்பு தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற உத்தரவு வந்துள்ளது.