இந்திய குடியுரிமையே வேண்டாம் - குஜராத்தை காலி செய்து கிளம்பிய 20 ஆயிரம் மக்கள்!! இதில் தமிழகத்தின் இடம்?
கடந்த 2023-ஆம் ஆண்டில் மட்டும் இந்திய குடியுரிமை வேண்டாம் என குஜராத் மாநிலத்தை சேர்ந்த 241 பேர் வெளிநாடுகளில் குடிபெயர்ந்துள்ளார்கள்.
குடியுரிமை
வெளிநாடுகளின் மோகம் மக்களிடம் அதிகளவில் இருப்பது சாதாரண விஷயமே. ஆனால், அது குடியுரிமையை வேண்டாம் என துறந்து வெளிநாடுகளிலேயே செட்டிலாவது மட்டுமே பலரின் எண்ணத்தை சீண்டுகிறது.
உலகின் மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பிரச்சனைகள் இல்லை என கூறமுடியாது. கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து மதவாத பிரச்சனைகள் தலைதூக்கி வருவதை நாம் காணமுடிவதே நிதர்சனமே. தொடர்ந்து அதிகரித்து வரும் வரிகள், படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் இருப்பது என பல பிரச்சனைகள் உள்ளது நாட்டில்.
20 ஆயிரம்
இப்படியிருக்கும் நிலையில் தான் இந்திய குடியுரிமை வேண்டாம் என வெளிநாடுகளில் தஞ்சமடைந்தவர்களின் எண்ணிக்கை பட்டியல் வெளியாகியுள்ளது.
சட்டமே இருக்கே...!! இலங்கை தமிழர்களும் இந்துக்கள் தானே - ஏன் குடியுரிமை வழங்கவில்லை - Advocate Mario Johnson..!!
இதில் முதல் இடத்தில் இருக்கும் மாநிலம் டெல்லி (60,414) முதல் இடத்திலும், பஞ்சாப் (28,117) இரண்டாம் இடத்திலும் உள்ளது. அவ்வாறு குடியுரிமையை கைவிடுபர்கள் சுமாராக 30 முதல் 45 வயதுடையவர்களாகவே இருக்கிறார்கள்.
கடந்த 2014 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் குஜராத் மாநிலத்தில் இருந்து மட்டும் 22,300 பேர் தங்கள் இந்திய குடியுரிமையை கைவிட்டுள்ளனர். இதில், மற்ற மாநிலங்களை குறிப்பிடும் போது, தமிழகத்தின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.