இந்து என உறுதி செய்த பின்னரே சுட்டனர் - உயிர் பிழைத்தவர்கள் கண்ணீர்
ஐடி கார்டை வாங்கி இந்து என உறுதி செய்த பின்னரே சுட்டு கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதல்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 26 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தனர். இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
26 பேர் பலி
'காஷ்மீரில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்கள் ஒருபோதும் தப்பிவிட முடியாது' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதன் காரணமாக தனது 2 நாள் சவுதி அரேபியா பயணத்தை முன்னதாக முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி வந்தடைந்தார்.
இதற்கிடையில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் ஐடி கார்டை வாங்கி இந்து என உறுதி செய்த பின்னரே சுட்டு கொலை செய்தனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.