தீபாவளி விற்பனைக்காக கடைகள் இரவு 1 மணி வரை இயங்க அனுமதி - காவல்துறை
தீபாவளி விற்பனைக்காக கடைகள் இரவு 1 மணி வரை திறக்கலாம் என காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
சூடு பிடிக்கும் விற்பனை
தித்திக்கும் தீபாவளி ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மக்கள் புத்தாடைகள் மற்றும் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க கடைகளில் குவிந்து வருகின்றனர்.
சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தீபாவளி விற்பனையானது சூடு பிடித்துள்ளது.
இந்த நிலையில் வார இறுதி நாட்கள் போன்று வார நாட்களும் களைக்கட்டு காணப்படுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
போலீசார் அனுமதி
புத்தாடை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவதால் கூட்ட நெரிசலை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மக்கள் இரவு 10 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்படுவதால் தேவையான பொருட்களை வாங்க முடியாமல் சிரமம்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து கோவையில் தீபாவளி பண்டிகையை அடுத்து இரவு 1 மணி வரை கடைகளை திறந்து வியாபாரம் செய்ய காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.