சூப்பர் மார்க்கெட்டில் செய்த காரியம் - 2 இந்திய மாணவிகள் அமெரிக்காவில் கைது!

United States of America India Andhra Pradesh World
By Jiyath Apr 19, 2024 11:13 AM GMT
Report

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 2 மாணவிகள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சூப்பர் மார்க்கெட்

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 20 மற்றும் 22 வயதுடைய இரண்டு மாணவிகள் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உயர்கல்வி படித்து வருகின்றனர். இவர்கள் ஹோபோக்கன் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்க சென்றுள்ளனர்.

சூப்பர் மார்க்கெட்டில் செய்த காரியம் - 2 இந்திய மாணவிகள் அமெரிக்காவில் கைது! | Shoplifting Two Indian Students Arrested In Us

அங்கு பொருட்கள் வாங்கிய பிறகு இருவரும் பணம் கொடுக்காமல் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஹோபோக்கன் நகர போலீசாருக்கு சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் தகவல் கொடுத்தனர்.

இந்தியாவில் பாம்புகளே இல்லாத ஒரே மாநிலம் இதுதான் - ஆச்சரிய தகவல்!

இந்தியாவில் பாம்புகளே இல்லாத ஒரே மாநிலம் இதுதான் - ஆச்சரிய தகவல்!

மாணவிகள் கைது 

உடனடியாக அங்கு வந்த போலீசார் இரு மாணவிகளையும் கைது செய்து விசாரித்தனர். அப்போது ஒரு மாணவி காசு கொடுக்காத பொருளுக்கு இரு மடங்கு பணத்தை தந்து விடுவதா தெரிவித்துள்ளார். மற்றோரு மாணவி இது போன்று இனி செய்ய மாட்டோம் என்று கதறி அழுதுள்ளார்.

சூப்பர் மார்க்கெட்டில் செய்த காரியம் - 2 இந்திய மாணவிகள் அமெரிக்காவில் கைது! | Shoplifting Two Indian Students Arrested In Us

ஆனாலும் தவறு செய்திருப்பது நிரூபணம் ஆகியுள்ளதால் 2 மாணவிகளையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவம் அங்கிருக்கும் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.