அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் - அமெரிக்காவில் நடத்தப்பட்ட கார் பேரணி!
அமெரிக்காவின் எடிசன் பகுதியில் உள்ள இந்தியர்கள் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கார் பேரணி ஒன்றை நடத்தினர்.
ராமர் கோவில்
உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. அதற்கான கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த விழாவில் பங்கேற்க புத்த மத தலைவர் தலாய் லாமா, கேரளாவின் மாதா அமிர்தானந்தமயி, பாபா ராம்தேவ், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னணி தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
கார் பேரணி
இந்நிலையில் அமெரிக்காவின் எடிசன் பகுதியில் உள்ள இந்தியர்கள் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கார் பேரணி ஒன்றை நடத்தினர்.
இதற்காக 350-க்கும் மேற்பட்ட கார்கள் வரிசையாக அணிவகுத்தன. அந்தக் கார்களில் இந்து சமயம் சார்ந்த கொடிகள் கட்டப்பட்டு, பேரணி தொடங்கும் முன், கடவுள் ராமர் ஆராதனை பாடல்களும் பாடப்பட்டன.