ஐ லவ் யூ சொல்ல சொன்ன கடைகாரர்..கடுப்பான மாணவிகள் நடுரோட்டில் செய்த சம்பவம் -வீடியோ!

Sexual harassment India Rajasthan Crime
By Swetha Sep 02, 2024 08:50 AM GMT
Report

தவறாக நடந்துகொண்ட கடைகாரரை மாணவிகள் அறைந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கடைகாரர்

ராஜஸ்தான் மாநிலம் திட்வானா-குச்சமான் மாவட்டத்தில் உள்ள ஒரு செல்போன் கடைக்கு மாணவிகள் சிலர் ரீசார்ஜ் செய்ய சென்றுள்ளனர். இந்த சூழலில் கடையின் உரிமையாளர் அவ்வப்போது மாணவிகளிடம் தவறான நோக்கத்துடன் பேசியிருக்கிறார்.

ஐ லவ் யூ சொல்ல சொன்ன கடைகாரர்..கடுப்பான மாணவிகள் நடுரோட்டில் செய்த சம்பவம் -வீடியோ! | Shopkeeper Who Asked To Say I Love You Got Slapped

அதாவது,போனை ரீசார்ஜ் செய்ய வந்த மாணவிகளிடம், முதலில் 'ஐ லவ் யூ' சொல்லுங்கள், பின்னர் ரீசார்ஜ் செய்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதனால் கடும் கோபமடைந்த மாணவிகள்,

கழிவறையில் ரகசிய கேமரா; பல பெண்களின் போட்டோ, வீடியோக்களை விற்ற மாணவி!

கழிவறையில் ரகசிய கேமரா; பல பெண்களின் போட்டோ, வீடியோக்களை விற்ற மாணவி!

மாணவிகள் 

கடை உரிமையாளரை வெளியே இழுத்து வந்து சரமாரியாக அடித்துள்ளனர். பின்னர் அப்பகுதி இளைஞர்களின் உதவியுடன் கடை உரிமையாளரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.


கடை உரிமையாளரை மாணவிகள் அடித்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளப்பக்கத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் பலரும் மாணவிகளின் தைரியத்தை பாராட்டி வருகின்றனர்.