தொடரும் மாணவர்கள் மரணம் - இந்திய நடன கலைஞர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை!
அமெரிக்காவின் அமர்நாத் கோஷ் என்ற இந்திய நடன கலைஞர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கிச்சூடு
இந்தியாவின் கொல்கத்தா நகரை சேர்ந்தவர் அமர்நாத் கோஷ். குச்சிப்புடி, பரதநாட்டியம் ஆகிய கலைகளில் தேர்ந்தவரான இவர், அமெரிக்காவில் பிஎச்.டி படிப்பை படித்து வந்துள்ளார்.
அமர்நாத் கோஷ் கடந்த செவ்வாய் கிழமை செயின்ட் லூயிஸ் அகாடமியருகே நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
5 பேர் உயிரிழப்பு
இதில் அவர் படுகாயமடைந்து உயிரிழந்து உள்ளார். அமர்நாத் கோஷின் பெற்றோர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதால், அவரின் உடலை பெற்று இறுதிச் சடங்கு மேற்கொள்ள அமெரிக்காவில் உள்ள சில நண்பர்கள் முயன்று வருகின்றனர்.
ஆனால், அதுபற்றி மேற்கொண்டு எந்த விவரமும் தெரிய வரவில்லை. அமெரிக்காவில், 2024-ம் ஆண்டு முதல் 2 மாதங்களில் இந்திய மாணவர்கள் 5 பேர் தனித்தனியான தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.