ஹிஜாப் விவகாரம் - கிராமிய விருது வென்ற பாடகருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை!
ஈரான் பாடகர் ஷெர்வின் ஹஜிபோர் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஷெர்வின் ஹஜிபோர்
ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடுமையான சட்டத்தையும் அந்நாட்டு அரசு கொண்டுவந்துள்ளது. அங்கு மாஷா அமினி என்ற பெண் ஹிஜாப் முறையாக அணியவில்லை என போலீசார் அவரை கைது செய்தனர்.
பின்னர் போலீசார் தாக்கியதால் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 2022-ம் ஆண்டு மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. இந்நிலையில் ஈரான் பாடகர் ஷெர்வின் ஹஜிபோர் என்பவரின் பாடல் போராட்டத்திற்கு ஆதரவாக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
சிறைத்தண்டனை
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நடைபெற்று வந்த விசாரணை முடிவில், அவருக்கு 3.8 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தண்டனை ஷெர்வின் ஹஜிபோர் முறையான வருத்தம் தெரிவிக்காததால் கொடுக்கப்பட்டுள்ளது.
இவர் இசை மற்றும் பாடலில் சிறந்த விளங்குபவர்களுக்கான, உலகின் உயரிய கிராமிய விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் ஷெர்வின் ஹஜிபோருக்கு, அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜில் பைடன் விருது வழங்கி கவுரவித்தார்.