மாஷா அமினி மரணம் எதிரொலி - ஈரானில் பற்றி எரியும் போராட்டம் - 50க்கும் மேற்பட்டோர் பலி
மாஷா அமினி மரணம் எதிரொலியாக ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாஷா அமினி மரணம்
ஈரான், குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி (22) என்ற இளம்பெண் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி கடந்த 13-ம் தேதி தெஹ்ரான் நகர போலீசாரால் கடுமையாக தாக்கினார்கள். இத்தாக்குதலில் அப்பெண் பலத்த படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், மாஷா கோமா நிலைக்கு சென்றார். இதனையடுத்து, கடந்த 17-ம் தேதி மாஷா சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவத்தை கண்டித்து ஈரானில் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மாஷா அமினியின் சொந்த ஊரான சஹிஸ் நகரில் தொடங்கிய போராட்டம் மெல்ல மெல்ல நாட்டின் பிற பகுதிகளிலும் பரவியுள்ளது.
இப்போராட்டத்தில் இறங்கிய முஸ்லீம் பெண்கள் தங்கள் ஹிஜாப்பை கழற்றி எறிந்தனர். ஹிஜாப்பை தீ வைத்து எரித்தனர். தங்கள் தலைமுடியை வெட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனையடுத்து, இது குறித்து தகவல்கள் பரவாமல் தடுக்க, இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்கள் முடக்கப்பட்டிருக்கின்றன.
போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது போலீசார், பாதுகாப்பு படையினர் கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தில் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஈரான் மனித உரிமைகள் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
Iranians are standing. Protecting each other. You're watching the ppl's resistance, out on the streets of Iran. #IranProtests2022 #Iran #IranRevolution #IranProtests2022 #IranProtests #MahsaAmini #OpIran # pic.twitter.com/guCIQcc6YT
— Afro-Gene (@john_baison) September 24, 2022
Protesters toss Molotov cocktails at regime forces in Qom, Iran pic.twitter.com/UsdxMu0MQD
— Borzou Daragahi ?? (@borzou) September 24, 2022
The #Iranian?? people are fully fed up with thier theocratical, corrupt and malicious regime.#IranProtests2022 #Iran #IranRevolution #IranianLivesMatter pic.twitter.com/X5tFBDeiHw
— Salman Al-Ansari (@Salansar1) September 24, 2022