குடிமகன்களே உஷார்..'விஸ்கி' பிரியரா நீங்கள்? அப்போ பெண்ணாக மாற வாய்ப்பு - ஷாக் தகவல்!
விஸ்கி குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
'விஸ்கி' பிரியர்
இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் மத்தியில் போதை பழக்கம் மிகவும் அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது விதவிதமான மது வகைகள் இருந்தபோதிலும் விஸ்கி, பிராந்தி, பீர் ஆகியவற்றை மட்டுமே அதிக அளவில் மது பிரியர்கள் குடித்து வருகிறார்கள்.
மது குடிப்பது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்ற போதிலும் மது பிரியர்களால் அதனை முழுமையாக தவிர்க்க முடியவில்லை. அதிலும் குறிப்பிட்ட மது வகையை அருந்தி பழகியவர்கள் அதை மட்டுமே குடிப்பதுண்டு. இந்த நிலையில், விஸ்கி குடிப்பதால் அவர்கள் பெண்ணாக மாற வாய்ப்புள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
விஸ்கி குடிப்பது உடல் சூட்டை அதிகமாக்கி விடும் என்று கூறுவார்கள். இதனால் விஸ்கி குடிப்பது உடல் சூட்டை அதிகரித்து பாலியல் உணர்வை தூண்டி விடும் என்கிற கருத்தும் குடிமகன்கள் மத்தியில் பரவலாகவே நிலவி வருகிறது.
ஷாக் தகவல்
இப்படிப்பட்ட விஸ்கி பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவு ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது, விஸ்கி குடிப்பவர்களின் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு அவர்கள் பெண்ணாக மாறிவிடும் ஆபத்து இருப்பதாகவும் கூறுகிறது.
இது தொடர்பாக 100 குடிமகன்களுக்கு விஸ்கியை ஊற்றி கொடுத்து ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். ஒரு மணி நேரத்துக்குள் 8 முறை மது கிண்ணங்களில் விஸ்கியை ஊற்றி கொடுத்து பரிசோதித்து பார்த்ததில் இது உறுதியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் என்கிற அமிலம் விஸ்கி சாப்பிடுபவர்களுக்கு அதிகமாக சுரந்து அதுவே ஆண்மைத் தன்மையை காலி செய்வதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, தொடர்ந்து விஸ்கி சாப்பிடுபவர்கள் முழு மங்கையாக மாறி விடுவதாகவும் கூறப்படுகிறது. எனவே விஸ்கி பிரியர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.