ED அதிகாரி கைது.. FIR-ல் ஷாக் தகவல்கள்.. சிக்குமா "பெரிய தலைகள்"..?
லஞ்சம் தரவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ED அதிகாரி மிரட்டியதாக தகவல் விசாரணையில் வெளிவந்துள்ளது.
ED அதிகாரி கைது
மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்த அங்கித் திவாரி என்பவர் திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இந்த கைதை தொடர்ந்து மதுரை ED அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 13 மணிநேரம் வரை நீடித்த இந்த சோதனையானது இன்று காலை நிறைவு பெற்றுள்ளது.
மிரட்டல்
இந்நிலையில், ED அதிகாரி மீது போடப்பட்டுள்ள FIR'இல் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதில், லஞ்சம் தராவிட்டால் அரசு மருத்துவர் மற்றும் அவரது மனைவி கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அங்கித் மிரட்டியதாக தகவல் இடம்பெற்றுள்ளது.
கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மணல் குவாரிகளிலும் சோதனை நடத்தியுள்ளார் என்ற தகவலும் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், மணல் குவாரி அதிபர்களிடமும் அங்கித் திவாரி லஞ்சம் பெற்றாரா? என விசாரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதன் மூலம் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.