நகைச்சுவை நடிகர் விஸ்வேஷ்வர ராவ் உயிரிழப்பு- திரைத்துறையினர் சோகம்!
நகைச்சுவை நடிகர் விஸ்வேஷ்வர ராவ் இன்று காலமானார்.
விஸ்வேஷ்வர ராவ்
தமிழ், தெலுங்கு என பல படங்களில் நகைச்சுவை நடிகராக வளம் வந்தவர் நடிகர் விஸ்வேஷ்வர ராவ் (62). இந்நிலையில், அவர் இன்று உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது ஈமச்சடங்கு நாளை நடைபெற உள்ளது.
சிறுசேரியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படவுள்ளது. நகைச்சுவை நடிகர் சேஷூ, டேனியல் பாலாஜி, இப்போது விஸ்வேஷ்வர ராவ் என தொடர்ந்து நடிகர்களின் இறப்பு அவர்களது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உயிரிழப்பு
சினிமா மட்டுமின்றி சீரியல்களிலும் நடித்து வந்த இவர், நடிப்பு,இயக்கம்,தயாரிப்பு என பன்முகம் கொண்டவர் ஆவர். ஆந்திராவை பூர்விகமாகக் கொண்ட இவர் தனது சினிமா வாழ்க்கையில் நுழையும் முன் எழுத்தாளர் மற்றும் இயக்குநராகத் தொடங்கினார்.
விஸ்வேஸ்வர ராவ் 1979-ம் ஆண்டு ’நாக்னா சத்யம்’ படத்திற்காகவும், 1980-ல், ’ஹரிச்சந்துருடு’ படத்திற்காகவும் சிறந்த திரைப்படத்திற்கான (தெலுங்கு) இரண்டு தேசிய திரைப்பட விருதுகளை பெற்றுள்ளார். இவர் தெலுங்கு திரையுலகில் முன்னணி காமெடியனாக விளக்கியுள்ளார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.