பூஜைக்காக கோவிலுக்கு சென்ற ஐயப்ப பக்தர்கள் - நள்ளிரவில் உடல் சிதறி உயிரிழந்த கொடூரம்!

Karnataka Fire Crime Accident
By Vidhya Senthil Dec 30, 2024 06:00 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

 சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து ஐயப்ப பக்தர்கள் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கர்நாடகா

கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் வந்துள்ளனர். அங்குச் சாமி தரிசனம் செய்துவிட்டு இரவு கோவில் அறையில் தங்கியுள்ளனர்.அப்போது பக்தர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது, ​​அங்கிருந்த சமையல் காஸ் சிலிண்டர் திடீரென வெடித்துச் சிதறியது.

உடல் சிதறி உயிரிழந்த ஐயப்ப பக்தர்கள்

இந்த சம்பவத்தில் அங்குத் தூங்கிக்கொண்டிருந்த 9 ஐயப்ப பக்தர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர். இந்த சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். மேலும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

1 வயது குழந்தை கழுத்து அறுத்துக் கொலை..ஆத்திரத்தில் தாய் செய்த கொடூரம் - பகீர் பின்னணி!

1 வயது குழந்தை கழுத்து அறுத்துக் கொலை..ஆத்திரத்தில் தாய் செய்த கொடூரம் - பகீர் பின்னணி!

ஐயப்ப பக்தர்கள்

உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி 6 உயிரிழந்தனர்.மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

உடல் சிதறி உயிரிழந்த ஐயப்ப பக்தர்கள்

சிலிண்டர் வெடித்ததில் காயமடைந்தவர்களின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.