ஜெபிப்பதற்கு அழைத்த மத போதகர்.. நம்பி சென்ற இளம் பெண்ணை - கடைசியில் நேர்ந்த கொடூர சம்பவம்!

Chennai Sexual harassment Crime
By Vidhya Senthil Dec 28, 2024 07:59 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

  ஜெபம் நடத்துவதாகக் கூறி இளம் பெண்ணை மத போதகர்  பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  மத போதகர்

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியைச் சேர்ந்த கெனிட்ராஜ் (47) என்பவர் கிறிஸ்தவ திருச்சபையில் போதகராக உள்ளார். இவரது வீட்டின் முதல் தளத்தில் இளம்பெண் ஒருவர் கணவர், பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் கணவன் மனைவி இடையே தகராறு வந்துள்ளது.

இளம் பெண்ணை மத போதகர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்

இதனைக் கவனித்த மத போதகர் கெனிட்ராஜ் உங்களுக்குப் பிசாசு பிடித்துள்ளது. இதனைச் சரி செய்ய ஜெபிப்பதற்காகச் சபைக்கு வரவேண்டும் என கெனிட்ராஜ் கூறியுள்ளார்.அவரின் பேச்சை நம்பி அந்த பெண் அவரது சபைக்குச் சென்றுள்ளார்.

தண்ணீர் டிரம்மில் சடலமாகக் கிடந்த 2 சிறுமிகள்..54 வயதுடைய நபர் செய்த கொடூரம்- கதி கலங்க வைக்கும் சம்பவம்!

தண்ணீர் டிரம்மில் சடலமாகக் கிடந்த 2 சிறுமிகள்..54 வயதுடைய நபர் செய்த கொடூரம்- கதி கலங்க வைக்கும் சம்பவம்!

அப்போது இளம்பெண்ணிடம் கெனிட்ராஜ் ஆபாசமாகப் பேசி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.அதன் பின்னர், இளம் பெண்ணின் வீட்டுக்குச் சென்ற கெனிட்ராஜ், இப்போது தனது வீட்டிற்கு வந்தால் ஜெபித்து அனுப்புவேன் .

பாலியல் வன்கொடுமை

இல்லையென்றால் உன் கணவர், பிள்ளைகளைக் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த இளம்பெண் , கெனிட்ராஜ் வீட்டுக்குச் சென்றுள்ளார்.அப்போது கெனிட்ராஜ் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

இளம் பெண்ணை மத போதகர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் அங்கிருந்து தப்பித்து ஓடிச் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை, கெனிட்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.