ஆன்லைன் விளையாட்டுக்காக வாங்கிய கடன்.. மரம் அறுக்கும் இயந்திரத்தால் கொடூர கொலை - பகீர் பின்னணி!
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபரை மரம் அறுக்கும் இயந்திரத்தால் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் வசித்து வருபவர் விவசாயி ரமேஷ். இவரது மனைவி யசோதா. இந்த நிலையில் மர்ப நபர் ஒருவர் நள்ளிரவில் வீட்டின் கதவை தட்டியுள்ளார். அப்போது கதவைத் திறந்த யசோதாவிடம் மரம் அறுக்கும் இயந்திரத்தை ஆர்டர் வந்துள்ளது என்றார்.
அதற்கு யாரும் இதை ஆர்டர் செய்யவில்லை எனக் கூறிக்கொண்டிருந்த போது மரம் அறுக்கும் இயந்திரத்தை ஆன் செய்து சரமாரியாக யசோதாவை வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். இதனையடுத்து வீட்டிற்கு உள்ளே சென்றுள்ளார்.
அப்போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உறங்கிக் கொண்டிருந்த விவசாயி ரமேஷை அதே இயந்திரத்தால் கழுத்தைவெட்டி கொலை செய்தார். இந்த சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
கொடூர கொலை
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் யசோதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரமேஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் ஸ்ரீரங்க பட்டினாவை சேர்ந்த முகமது ஹிப்ராபிம் என்பது தெரியவந்தது. ஆன்லைன் விளையாட்டுக்காக வாங்கிய கடனை திருப்பி தராததால் திருட வந்த போது இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது.