விளம்பரத்தில் நடிக்க ஆசையாக சென்ற பெண் - ஹோட்டல் அறையில் காத்திருந்த அதிர்ச்சி!

Tamil nadu Chennai Sexual harassment Crime
By Jiyath May 17, 2024 05:41 AM GMT
Report

விளம்பர படத்தில் நடிப்பதற்காக சென்ற பெண்ணிடம் நபர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புகார் மனு

கேரளாவை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், நான் மாடலிங் தொழில் செய்து விளம்பர படங்களிலும் நடித்து வருகிறேன்.

விளம்பரத்தில் நடிக்க ஆசையாக சென்ற பெண் - ஹோட்டல் அறையில் காத்திருந்த அதிர்ச்சி! | Shock Awaited In The Hotel Room For Young Girl

ஒரு விளம்பர படத்தில் நடிக்கும்போது சித்தார்த் என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் அடிக்கடி என்னிடம் செல்போனில் பேசி வந்தார். பின்னர் என்னை விளம்பர படத்தில் நடிக்க வைப்பதற்கு இங்கிலாந்து அனுப்புவதாக கூறினார். அதற்காக சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு வரும்படி கூறினார்.

தட்டிக்கேட்ட கணவனை கட்டிப்போட்டு ஆணுறுப்பில் சிகரெட் சூடு - மனைவி வெறிச்செயல்!

தட்டிக்கேட்ட கணவனை கட்டிப்போட்டு ஆணுறுப்பில் சிகரெட் சூடு - மனைவி வெறிச்செயல்!

போலீசார் விசாரணை 

நானும் ஆசையாக அந்த நட்சத்திர ஹோட்டலில் சென்று அவர் தங்கியிருந்த அறைக்கு சென்றேன். அப்போது முதலில் விளம்பர படம் தொடர்பாக அவர் என்னிடம் பேசினார். பின்னர் திடீரென என்னை கட்டிப்பிடித்து முத்தமிட முயன்று, அவரது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார்.

விளம்பரத்தில் நடிக்க ஆசையாக சென்ற பெண் - ஹோட்டல் அறையில் காத்திருந்த அதிர்ச்சி! | Shock Awaited In The Hotel Room For Young Girl

நான் அதற்கு மறுப்பு தெரிவித்து அவரை பிடித்து கீழே தள்ளிவிட்டேன். பின்னர் அங்கிருந்து தப்பியோடி வந்துவிட்டேன்" என்று அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த ராயப்பேட்டை போலீசார், சித்தார்த்தை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.