54 வயது; இதனால்தான் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை - ஷோபனா பளீச்!
திருமணம் செய்து கொள்ளாதது குறித்து ஷோபனா மெளனம் கலைந்துள்ளார்.
ஷோபனா
தமிழில் கமல் ஹாசன் நடித்த எனக்குள் ஒருவன் படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் ஷோபனா. சட்டத்தின் திறப்பு விழா, இது நம்ம ஆளு, பாட்டுக்கு ஒரு தலைவன், சிவா, தளபதி என்று பல படங்களில் நடித்துள்ளார்.
விஜயகாந்த், ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்களுடன் அசத்தியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் , கன்னடம் ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
திருமணம்?
2006ல் ஏ பி ஜே அப்துல் கலால் கையால் பத்ம ஸ்ரீ விருது வாங்கினார். தற்போது சில தினங்களுக்கு முன் இவருக்கு மத்திய அரசு பத்மபூஷ்ண விருது அறிவித்தது. இதற்கிடையில், பாரத நாட்டிய பள்ளி ஒன்றை நடத்தி வரும், ஷோபனா, இதில் பலருக்கு இலவசமாகவும் பாரத நாட்டியம் கற்று கொடுத்து வருகிறார்.
ஆனால் 54 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் இதுகுறித்து பேசியுள்ள அவர், திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை.
திருமணத்தில் நம்பிக்கையும் இல்லை. இப்படியே இருக்கும் வாழ்க்கை தான் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். பெண் குழந்தை ஒன்றை ஷோபனா தற்போது தத்தெடுத்து வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.