14 ஆண்டு வாழ்க்கை முடிவு..! 3-வது திருமணம் செய்த சோயிப்!! சானியாவின் உருகவைக்கும் பதிவு..!

Cricket Tennis Pakistan India
By Karthick Jan 20, 2024 07:31 AM GMT
Report

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் கணவரும் பாகிஸ்தான் அணியின் வீரருமான சோயிப் மாலிக் 3-வது திருமணம் செய்துகொண்டுள்ளார்.

சானியா - சோயிப்

கடந்த சில நாட்களாக சானியா மிர்சா விவகாரத்து தொடர்பான செய்திகள் வெளியாகின நிலையில், அதனை பலரும் மறுத்து கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

14 ஆண்டு வாழ்க்கை முடிவு..! 3-வது திருமணம் செய்த சோயிப்!! சானியாவின் உருகவைக்கும் பதிவு..! | Shoaib Malik Marries Sania Mirza Sad Post

ஆனால், அதிர்ச்சியளிக்கும் விதமாக இன்று சோயிப் மாலிகே பாகிஸ்தான் நாட்டின் நடிகையான சனா ஜாவீத் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர்கள் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

3-வது திருமணம்

சோயிப் மாலிக்கிற்கு இது 3-வது திருமணமாகும். 2002-ஆம் ஆண்டில் ஆயிஷா என்பவரை திருமணம் செய்த அவர், 2010-இல் அவரை பிரிந்து அதே ஆண்டில் இந்திய டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சாவை திருமணம் செய்து கொண்டார்.

Marriage is hard - விவாகரத்து செய்கிறாரா சானியா மிர்சா - பகீர் கிளப்பும் பதிவு..!

Marriage is hard - விவாகரத்து செய்கிறாரா சானியா மிர்சா - பகீர் கிளப்பும் பதிவு..!

14 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சட்டென தற்போது 3-வது திருமணத்திற்கு சோயிப் மாலிக் நகர்ந்துள்ளது சானியாவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சானியா - சோயிப் பிரிவு குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்த சூழலில் தான் சானியா கடந்த நாட்கள் முன்பு பதிவிட்ட இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகின்றது. அதில் அவர், Marriage is hard என பகிர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

shoaib-malik-marries-sania-mirza-sad-post