Marriage is hard - விவாகரத்து செய்கிறாரா சானியா மிர்சா - பகீர் கிளப்பும் பதிவு..!
இந்திய டென்னிஸ் விளையாட்டின் முன்னோடியாக திகழ்கிறார் சானியா மிர்சா.
சானியா மிர்சா
டென்னிஸ் உலகில் குறிப்பிடத்தக்க பல சாதனைகளை செய்துள்ள சானியா மிர்சா, இன்றளவும் இந்திய அளவில் பிரபலமான பெண்ணாகவே நீடிக்கிறார்.
பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை மணந்த சானியா மிர்சா கடந்த ஆண்டு டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவ்வப்போது, சானியா மிர்சா மற்றும் சோயிப் மாலிக் இருவரும் விவாகரத்து பெற போவதாக தகவல் வெளியாகி கொண்டே தான் இருக்கின்றது.
இந்நிலையில் தான் தற்போது, சானியா மிர்சாவின் இன்ஸ்டா பதிவு வைரலாகி மீண்டும் விவாகரத்து பேச்சுக்களை அதிகரித்துள்ளது.
அதில்,திருமணம் கடினமானது. விவாகரத்து கடினமானது. உங்கள் கடினமானதைத் தேர்ந்தெடுங்கள்.
உடல் பருமன் கடினமானது. பொருத்தமாக இருப்பது கடினம். உங்கள் கடினமானதைத் தேர்ந்தெடுங்கள்.
கடனில் இருப்பது கடினம். நிதி ரீதியாக ஒழுக்கமாக இருப்பது கடினம். உங்கள் கடினமானதைத் தேர்ந்தெடுங்கள்.
தொடர்பு கடினமாக உள்ளது. தொடர்பு கொள்ளாமல் இருப்பது கடினம். கடினமாக தேர்ந்தெடுங்கள்.
வாழ்க்கை எளிதாக இருக்காது. அது எப்போதும் கடினமாக இருக்கும். ஆனால் நம் கடினமானதை நாம் தேர்வு செய்யலாம். புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுங்கள் என சானியாவின் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், இது வெறும் பதிவு மட்டுமே தவிர, இருவரும் விவாகரத்து பெறுவது குறித்த எந்த நோக்கத்திலும் இல்லை என்றும் தகவல் வெளிவந்துள்ளது.