ராகுல் காந்தி நாக்கை அறுத்தால் 11 லட்சம் பரிசு - எம்.எல்.ஏ அறிவிப்பால் சர்ச்சை
ராகுல் காந்தி நாக்கை அறுப்பவருக்கு 11 லட்சம் பரிசு வழங்குவதாக சிவசேனா எம்.எல்.ஏ அறிவித்துள்ளார்.
ராகுல் காந்தி
சமீபத்தில் அமெரிக்க சுற்றுப்பயணம் சென்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்பொழுது ஒரு நிகழ்வில் பேசிய ராகுல் காந்தி, "இந்தியா அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும் நாடாக இருக்குமானால் இங்கு இட ஒதுக்கீட்டை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் கட்சி யோசிக்கும் என்றும் 90 சதவீத மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் இருக்கும் நாட்டில் இருப்பதற்கு எனக்கு விருப்பமில்லை" என்று தெரிவித்தார்.
நாக்கை அறுத்தால் பரிசு
இதனையடுத்து ராகுல் காந்தி இட ஒதுக்கீட்டை அழிக்கப்பார்க்கிறார் என பாஜக குற்றஞ்சாட்டியது. இந்நிலையில் ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு 11 லட்சம் சன்மானம் வழங்குவதாக சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே) எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட்(sanjay gaikwad) தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய வீடியோவில், “அமெரிக்க பயணத்தின் போது, இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி ராகுல் காந்தி பேசினார். இது காங்கிரஸின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு 11 லட்சம் ரூபாய் சன்மானம் அளிப்பேன்.
ராகுல் காந்தியின் கருத்துகள் மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். மஹாராஷ்டிராவில் மராத்தியர்கள், தங்கர்கள் மற்றும் ஓபிசிக்கள் போன்ற சமூகங்கள் இடஒதுக்கீட்டிற்காக போராடுகின்றன, ஆனால் ராகுல் காந்தி இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி பேசுகிறார் என பேசியுள்ளார்.