ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு - சோனியா காந்தி வீடு முன்பு சீக்கியர்கள் போராட்டம்
சோனியா காந்தி வீடு முன்பு சீக்கியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ராகுல் காந்தி
எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவிற்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்பொழுது அங்கு ஒரு நிகழ்வில் ராகுல் காந்தி சீக்கியர்கள் குறித்து பேசிய விஷயம் சர்ச்சையாகியுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி-யில் நடந்த நிகழ்வில் பேசிய ராகுல் காந்தி, சில மதங்கள், மொழிகள், சமூகங்களை ஆர்.எஸ்.எஸ். மற்றவர்களைவிட தாழ்வாகப் பார்க்கிறது என பேசினார்.
சீக்கியர்கள்
மேலும், "இந்த சண்டை இந்தியாவில் ஒரு சீக்கியராக நீங்கள் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவீர்களா என்பதைப் பற்றியது, ஒரு சீக்கியராகக் கடா அணிய அனுமதிக்கப்படுவீர்களா என்பதைப் பற்றியது, குருத்துவாரா செல்ல அனுமதிக்கப்படுவீர்களா என்பதைப் பற்றியது இந்த சண்டை. நீங்கள் மட்டுமல்ல, எல்லா மதத்தவருக்குமானது" என தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங், ராகுல் காந்தி வஞ்சகம் நிறைந்தவர் என்றும் ஆபத்தான நோக்கில் பேசுகிறார் என்றும் கூறியிருக்கிறார். "நம் வரலாற்றில் ஒரு சமூகமாகச் சீக்கியர்கள் பதற்றமடைந்தது, பாதுகாப்பின்மையை உணர்ந்தது ராகுல் காந்தியின் குடும்பம் ஆட்சி செய்தபோது தான்" என இந்திரா காந்தியைச் சுட்டிக்காட்டிப் பேசியிருக்கிறார்.