பாலாஜி முருகதாஸ் உடன் நெருக்கமாக ஷிவானி - உறுதியான காதல்?
ஷிவானி, பாலாஜி முருகதாஸ் உடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஷிவானி - பாலாஜி
பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகையாக களமிரங்கியவர் ஷிவானி நாராயணன். சீரியல்களில் கவனம் செலுத்து வந்த ஷிவானி லாக்டவுனில் தனிமையில் நடனமாடும் ஹாட் வீடியோவை வெளியிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சி சென்றார்.
பிக்பாஸ் 5ம் சீசனில் ஜோடியாக வலம் வந்த ஷிவானி நாராயணன் மற்றும் பாலாஜி முருகதாஸ். தற்போது வரை இருவரும் நட்பு பாரட்டி வருகின்றனர். ஆனால் பல இடங்களில் இருவரும் ஜோடியாக வலம் வந்த வண்ணம் உள்ளனர்.
காதல்
சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது ரீல்ஸ், புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில், பாலாஜி முருகதாஸ் உடன் இருக்கும் சில புகைப்படங்களை ஷிவானி வெளியிட்டு இருக்கிறார்.
இன்று பாலாஜி முருகதாஸுக்கு பிறந்தநாள் என்பதால் இப்பதிவை போட்டுள்ளார்.
ஆனால் அந்த ஃபோட்டோக்களை பார்த்து ரசிகர்கள் இது காதலாக இருக்குமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.