கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி!

Bengaluru Jailer Captain Miller Shiva Rajkumar
By Swetha Apr 02, 2024 12:33 PM GMT
Report

கன்னட நடிகர் சிவராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவராஜ்குமார்

கன்னடத்தில் சூப்பர் ஸ்டார் நடிகரான சிவராஜ் குமார். அண்மையில், தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "ஜெயிலர்" மற்றும் "கேப்டன் மில்லர்" திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்திழுத்தார்.

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி! | Shiva Rajkumar Hospitalised In Bengaluru

தேவனஹள்ளி அருகே படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டபோது, திடீரென உடல்நிலை சரியில்லாததை உணர்ந்தார் சிவராஜ்குமார். இதனையடுத்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

என்னைக் கட்டிபிடித்தார்; 3 நாளா நான் குளிக்கவேயில்லை - மனம் திறந்த சிவ ராஜ்குமார்

என்னைக் கட்டிபிடித்தார்; 3 நாளா நான் குளிக்கவேயில்லை - மனம் திறந்த சிவ ராஜ்குமார்

உடல்நலக்குறைவு 

இந்நிலையில், அந்த படப்பிடிப்பு தளத்தில் அதிக தூசி இருந்ததே அவரது உடல் சிரமத்திற்குக் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர், மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டு தற்போது வராஜ்குமார் நலமாக இருப்பதாகவும், நாளை அவர் வீடு திரும்புவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி! | Shiva Rajkumar Hospitalised In Bengaluru

கடந்த மாதம் சிவராஜ்குமாரின் வலது தோள்பட்டையில் சோர்வு மற்றும் வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அதே சமயத்தில், அவரது உடல்நிலை குறித்து பல வதந்திகள் பரவியது.

இது குறித்து, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு இல்லை என்றும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், கவலைப்படத் தேவையில்லை என்றும் கூறினர்.