என்னைக் கட்டிபிடித்தார்; 3 நாளா நான் குளிக்கவேயில்லை - மனம் திறந்த சிவ ராஜ்குமார்
கமல்ஹாசனுடனான சந்திப்பு குறித்து சிவ ராஜ்குமார் மனம் திறந்துள்ளார்.
சிவ ராஜ்குமார்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்தின் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது. இந்தப்படத்தில், ரஜினியின் மகனாக வசந்த் ரவி நடித்திருந்தார்.

மோகன்லால், ஷிவா ராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெராப் ஆகியோர் முக்கிய கேமியோ ரோலில் நடித்து உள்ளனர். தமிழ் படங்களில் பெரிதாக தோற்றமளிக்காத சிவ ராஜ்குமார், ஒரே படத்தில் சில நிமிட காட்சிகளிலேயே மாஸ் காட்டி இருக்கிறார்.
சுவாரஸ்ய தகவல்
இந்நிலையில், இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் "சிறுவயதில் கமல் ஹாசன் அப்பாவைப் பார்க்க வந்தேன். கமலுடன் பேசத் தயங்கி ஒதுங்கி நின்றேன். அதன் பிறகு கமல் ஹாசன் என்னைக் கூப்பிட்டுப் பேசினார்.

'உங்களை ஒருமுறை கட்டிப்பிடிக்க வேண்டும்' என்றேன். கமல் ஹாசன் உடனே என்னை கட்டிப்பிடித்தார். கமல் ஹாசனை கட்டிப்பிடித்த மகிழ்ச்சியில் அடுத்த மூன்று நாட்களுக்கு நான் குளிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
You May Like This Video
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan