தினமும் 5.9 கோடி நன்கொடை வழங்கும் தமிழர் - அம்பானியே இவருக்கு அடுத்துதான்
இந்தியாவில் அதிக நன்கொடை வழங்கியவர்களின் பட்டியலை EdelGive-Hurun நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நன்கொடை
இந்த பட்டியல் கடந்த ஏப்ரல் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை வழங்கிய நன்கொடைகள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் 203 பேர் உள்ளனர். இவர்கள் மொத்தமாக ரூ. 8,783 கோடி நன்கொடையாக அளித்துள்ளனர். 18 பேர் ரூ.100 கோடிக்கு மேல் நன்கொடை வழங்கியுள்ளனர்.
ஷிவ் நாடார்
இந்த பட்டியலில் ரூ. 2,153 கோடி நன்கொடை வழங்கி HCL நிறுவனர் ஷிவ் நாடார் முதலிடத்தில் உள்ளார். இதன்படி ஒரு நாளைக்கு 5.9 கோடி ரூபாய் நன்கொடையுடன் 3வது முறையாக ஷிவ் நாடார் இந்த பட்டியலில் முதலிடம் வகிக்கிறார்.ஷிவ் நாடார் தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவர் ஆவார்.
ரூ. 407 கோடி நன்கொடை வழங்கிய ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி 2வது இடத்திலும், ரூ.352 கோடி நன்கொடை வழங்கி பஜாஜ் குடும்பம் 3வது இடத்திலும், ரூ.334 கோடி நன்கொடை வழங்கி ஆதித்ய பிர்லா குழும தலைவர் குமார மங்களம் பிர்லா 4வது இடத்திலும், ரூ.330 கோடி நன்கொடை வழங்கி அதானி குழும தலைவர் கவுதம் அதானி 5வது இடத்திலும் உள்ளனர்.
நந்தன் நிலகேனி
இன்போசிஸ் நிறுவன இணை நிறுவனர் நந்தன் நிலகேனி ரூ.307 கோடி வழங்கி 6வது இடத்தில் உள்ளார். ரூ.154 கோடி வழங்கி இவரது மனைவி ரோகினி நிலகேனி 10வது இடத்தில் உள்ளார்.
ஐஐடி மெட்ராஸுக்கு முன்னாள் மாணவர் என்ற அடிப்படையில் ரூ 228 கோடி நன்கொடை அளித்ததன் மூலம் இந்த பட்டியலில் 7வது இடம் பிடித்துள்ளார் INDO MIM இன் தலைவர் கிருஷ்ணா சிவுகுலா. ரூ.181 கோடி நன்கொடை வழங்கிய வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் 8வது இடத்தில் உள்ளார்.