தினமும் 5.6 கோடி நன்கொடை..2 லட்சம் கோடியை தாண்டிய சொத்து !இவரை பற்றி தெரியுமா?
பணக்காரர்
இந்த ஆண்டு வெளியிடப்பட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் 200 இந்தியர்கள் இடம் பெற்றிருந்தார்கள். இந்த பட்டியலில் தொடர்ந்து இடம் பிடித்து வருபவர் ஷிவ் நாடார்.
HCL நிறுவனரான இவரின் சொத்து மதிப்பு என்பது சுமார் 2,97,999 கோடி ரூபாயாக இந்திய மதிப்பீட்டில் கணக்கிடப்படுகிறது. தனது தொண்டு பணிகளுக்காகவும் இவர் புகழ் பெற்ற ஒருவராகவே இருக்கிறார்.
நன்கொடை
உங்களுக்கு உண்மை தெரிந்தால் அதிர்ந்து விடும். ஷிவ் நாடார் ஒரு நாளுக்கு சுமார் 5.6 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி வருகிறாராம். கடந்த 2011-2023 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 2,042 கோடி ரூபாயை இவர் நன்கொடையாக வழங்கியிருக்கிறாராம்.
இந்திய அளவில் ஒரு நாளைக்கு அதிக நன்கொடை வழங்கும் நபராக தொடர்ந்து 3 ஆண்டாக நீடித்து வருகிறார் ஷிவ் நாடார். சென்னையின் பிரபலமான SSN கல்லூரி நடத்தி வரும் இவர், நாட்டில் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.