ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் அதிகமாக வைத்திருப்பது இவரா? முகேஷ் அம்பானியிடம் கூட இவ்வளவு இல்லை?
உலக பணக்காரர்களில் ஒருவரான அம்பானி குறித்த செய்திகளை அறிந்து கொள்ள நாளும் பலர் ஆர்வமாகவே இருக்கிறார்கள்.
அம்பானி
முகேஷ் அம்பானி - ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர், ஒவ்வொரு நாளும் உலகளவில் கவனிக்கப்படும் ஒரு நபராகவே இருக்கிறார். அம்பானிகள் வசிக்கும் வீடு, அவர்களின் சொத்து மதிப்பு, அவர்கள் நடத்தும் கொண்டாட்டங்கள் என அனைத்துமே தலைப்பு செய்திகளாக மாறிவிடுகின்றன
அவ்வாறே அண்மையில் நடந்து முடிந்த அம்பானி இல்ல திருமண நிகழ்வு குறித்து இன்றும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட உலக நட்சித்திரங்களே திரண்டு விட்டார்கள் எனலாம். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவராக இருக்கிறார் அம்பானி.
அவரிடமே அதிகப்படியான பங்குகள் உள்ளது என பலர் நினைத்து விடலாம். ஆனால், அம்பானியிடமோ, அவரது மனைவியிடமோ, அவரது பிள்ளைகளிடமோ அதிகப்படியான பங்குகள் இல்லை.
அதிக பங்குகள்
அப்படி யாரிடம் அதிகப்படியான பங்குகள் இருக்கிறது என்ற கேள்விகள் எழுந்தால், அது திருபாய் அம்பானியின் மனைவியும், முகேஷ் அம்பானியின் தாயாருமான கோகிலா பென் அம்பானியிடமே இருக்கிறது. அவரிடம் மட்டும் சுமார் 1.57 கோடி பங்குகள் அதாவது மொத்த பங்குகளில் 0.24% பங்குகளை இருக்கிறதாம்.
அதே நேரத்தில், ஆகாஷ் - ஆனந்த் - ஈஷா அம்பானி ஆகியோரிடம் தலா 80 லட்ச பங்குகள் அதாவது 0.12 % -பங்குகள் இருக்கிறதாம். நிறுவனத்தின் புரமோட்டர்ஸ் என்ற முறையில் நிறுவனத்தின் 50.39 % பங்குளை அம்பானி குடும்பத்தினரே வைத்துள்ளார்கள்.
மீதமிருக்கும் 49.61% பங்குகள் உள்நாட்டு - வெளிநாட்டு, சில்லறை முதலீட்டாளர்கள் வசம் இருக்கிறது.
இந்த மதிப்புகள் அடிப்படையில் தற்போது கோகிலா பென் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.18,000 கோடி இருக்கும் என கணிக்கப்படுகிறது.