வெறும் 2 லட்சம் மட்டுமே கமிஷன் - சம்பளமே இல்லாமல் வேலை பார்க்கும் அம்பானி வாரிசுகள் - நூதன காரணம்?
அம்பானி மகன் திருமணம் மட்டுமே சுமார் 5000 கோடி ஆயிரம் கோடி செலவில் நடைபெற்று முடிந்துள்ளது.
அம்பானி
உலக அளவில் மிக பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழும் அம்பானி வீட்டில் நடக்கும் சம்பவங்கள் சாமானிய மக்களுக்கு ஆச்சரியம் கலந்து அதிசயமே. அண்மையில் நடைபெற்று முடிந்த அம்பானி மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண நிகழ்விற்கு மட்டுமே 5000 ஆயிரம் கோடி ரூபாய் செலவானதாக தகவல் உள்ளது.
இது நாட்டின் பட்ஜெட்டில் 3'இல் ஒரு பகுதி என்றும் கூறலாம். ஏனென்றால், தலைநகரை கட்டமைக்க ஆந்திராவிற்கு தற்போது அளிக்கப்பட்டுள்ள பட்ஜெட் 15,000 ஆயிரம் கோடி தான். அதற்கு நெருங்கி செலவு செய்யப்பட்டு விட்டது.அப்படி என்றால் அம்பானி குடும்ப மகன்களின் சம்பளம் எத்தனை கோடிகளில் இருக்கும் என சாதரணமாகவே நமக்கு ஆசை எழலாம். எவ்வளவு என்று பார்த்தால், உங்களுக்கே அதிர்ச்சியாக இருக்கும்.
ரிலையன்ஸ் நிறுவனங்களில் நிர்வாகக் குழுவில் முக்கிய அதிகாரத்தை பெறுகிறார்கள் அம்பானியின் வாரிசுகள். 2014ஆம் ஆண்டில் நிர்வாகக் குழு உறுப்பினராக இணைந்த நீதா அம்பானி போலவே குழுமத்தில் அதிகாரம் படைத்தவர்களாகவே இருக்கிறார்கள் அம்பானியின் வாரிசுகளான இஷா, ஆகாஷ் ஆனந்த்.
சம்பளம்
ஆனால் இவர்கள் யாருக்குமே சம்பளம் இல்லையாம். சம்பளம் வாங்காமல் தான் அம்பானியின் வாரிசுகள் பணிபுரிகிறார்கள். நிர்வாகத்தின் ஆலோசனை குழுக்களில் பங்கேற்க இவர்களுக்கு ரூ.6 லட்சம் வழங்கப்படுகிறதாம். வாரிசுகளுக்கு சம்பளமாக ஒரு சில லட்சங்கள் கிடைக்கிறது. ஆண்டிற்கு அவர்களுக்கு 2 கோடி ரூபாய் கமிஷனாகவும் வழங்கப்படுகிறது.
இதில், விஷயமென்னவென்றால் 2020-ஆம் ஆண்டில் இருந்து நிர்வாகத்தில் இருந்து தனக்கு வரும் சம்பளத்தை வெறும் ரூ.15 கோடியில் கட்டுப்படுத்தியிருக்கும் அம்பானி, அதனையே பிள்ளைகளின் சம்பள விவகாரத்திலும் கையாளுகிறாராம்.
ஆனால், நிர்வாகத்தின் முக்கால் வாசி ஷேர்கள் அம்பானி வாரிசுகளிடம் இருந்ததால், அவர்களின் பங்கு என்பது பல ஆயிரம் கோடிகளை தாண்டி விட்டது என்பது இதில் குறிப்பிடத்தக்க விஷயமே ஆகும்.