ஷீரடி சாய்பாபா கோவில் மூடல் - விளக்கமளித்த நிர்வாகம்
ஷீரடி சாய்பாபா கோவில் மூடப்படும் என வெளியான தகவலை நிர்வாகம் மறுத்துள்ளது.
ஷீரடி சாய்பாபா
மகாராஷ்டிர மாநிலம் அகமது நகரில் ஷீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. மிகவும் பிரபலமான இந்த கோவிலுக்கு நாள்தோறும் திரளான பக்தர்கள் வருகை தந்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோயிலுக்கான பாதுகாப்பை இனி மத்திய தொழிலக பாதுகாப்பு படை மேற்கொளும் என அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்தது. சாய்பாபா டெம்பிள் டிரஸ்ட் அமைப்பின் சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
வதந்திக்கு முற்றுபுள்ளி
மேலும், கோவில் காலவரையின்றி மூடப்படுவதாகவும் செய்திகள் வெளியானது. கோவில் மூடப்படும் பட்சத்தில் உணவு விடுதிகள் மற்றும் தங்கும் விடுதிகள், கடைகளில் வியாபாரம் பாதிக்கப்படும் என மக்கள் அச்சத்தில் இருந்தனர்.
தற்போது, இந்த தகவலை கோவில் நிர்வாகம் மறுத்துள்ளது. தொடர்ந்து, கோவில் வழக்கம்போல் திறந்திருக்கும் என்றும், பிரசாதக்கூடம், பக்தர்கள் தங்குமிடம், மருத்துவமனை என அனைத்தும் வழக்கம்போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.