ஷீரடி சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்த நயன் - விக்கி ஜோடி ; இணையத்தில் புகைப்படம் வைரல்

Nayanthara Vignesh Shivan
By Swetha Subash May 05, 2022 11:45 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சினிமா
Report

தமிழ் சினிமாவின் பிரபலமான காதல் ஜோடிகளாக வலம் வரும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடி நானும் ரௌடி தான் படத்தில் ஒன்றாக இணைந்தன் மூலம் காதலில் விழுந்து பல வருடங்களாக காதலித்து வருகின்றனர்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது. இதனை நயன்தாரா தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தினார்.

ஷீரடி சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்த நயன் - விக்கி ஜோடி ; இணையத்தில் புகைப்படம் வைரல் | Nayanthara Vignesh Shivan Visit Shiridi Sai Baba

இந்நிலையில் நடிக்க கமிட் ஆகியுள்ள படங்களில் மட்டும் நடித்து முடித்து விட்டு நயன்தாரா வரும் ஜூன் மாதம் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இவர்களின் நிச்சயதார்த்தம் போலவே இவர்களது திருமணமும் எளிமையான முறையில் நடைபெறவுள்ளதாக கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளத்தில் செய்திகள் பரவி வருகிறது.

இதற்கிடையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா,சமந்தா ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் 28-ம் தேதி வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இன்று ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.