ஷின்சோ அபேவை கொலை செய்தது ஏன்? வெளியான குற்றவாளியின் திடுக்கிடும் வாக்குமூலம்

Shinzo Abe
By Nandhini Jul 08, 2022 01:35 PM GMT
Report

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுக்கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு

67 வயதான அபே வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ள ஜப்பான் நாடாளுமன்ற மேலவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அதற்காக இன்று ஷின்சோ அபே நரா நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் அவரது மார்பில் 2 குண்டுகள் துளைத்தது.

ரத்த வெள்ளத்தில் சரிந்த ஷின்சோ அபே உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரதமர் மோடி இரங்கல்

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட சர்வதேச தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாளை, ஷின்ஷோ அபேவின் மறைவையொட்டி ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Shinzo Abe

கொலையாளி குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்

பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கொலையாளி 41 வயதாகும் டெட்யா யமகாமி. அபேவை சுட்ட பின் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தபோது அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இவர் நாரா பகுதியை சேர்ந்தவர். ஜப்பான் கடற்படை என அழைக்கப்படும் ஜப்பானிய கடல்சார் தற்காப்பு படையின் முன்னாள் வீரராவார். ஷின்சோ அபே பிரதமராக இருந்தபோது அவரது நடவடிக்கையால் இவர் பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனால், அபேவை பழிவாங்க நீண்ட நாட்களாக திட்டம் தீட்டிய டெட்யா யமகாமி அவரை கொலை செய்யும் நோக்கில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதாக தவல்கள் வெளியாகி உள்ளன.

அபேவை கொலை செய்ய வீட்டிலேயே பிரத்யேகமாக துப்பாக்கியை தயாரித்திருக்கிறார். அவ்வாறு தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்தே இந்த கொலைக் குற்றத்தை நிகழ்த்தியுள்ளார். 

எல்லாம் இதற்காகத்தான் : வெளியானது பொன்னியின் செல்வன் பாகம்-1