ஷில்பா ஷெட்டியின் ரூ. 97 கோடி சொத்துக்கள் பறிமுதல்; அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

Enforcement Directorate Shilpa Shetty
By Swetha Apr 20, 2024 08:42 AM GMT
Report

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஷில்பா ஷெட்டி சொத்துக்கள் 

கடந்த 2017ம் ஆண்டு வேரியபில் டெக் லிமிடெட் என்னும் நிறுவனம் பிட்காயினில் முதலீடு செய்தால் மாதம் 10 சதவிகிதம் வட்டி வழங்கப்படும் என்று நாடு முழுவதும் விளம்பரம் செய்தது. இதனை நம்பி பொது மக்கள் பலரும் பணம் செலுத்தியதால் அந்த நிறுவனம் சுமார் ரூ.6 ஆயிரத்து 600 கோடி வரை வசூலித்தது.

ஷில்பா ஷெட்டியின் ரூ. 97 கோடி சொத்துக்கள் பறிமுதல்; அமலாக்கத்துறை அதிரடி சோதனை! | Shilpa Shettys Property Worth Rs 97 Crore Frozen

ஆனால் கூறியபடி வட்டி வழங்காமல் மக்கள் முதலீடு செய்த பணம் பெரும் மோசடிக்கு உள்ளானது. இதனால் பிட் காயினில் முதலீடு செய்த ஆயிரக்கணக்கானோர் தங்களது பணத்தை இழந்தனர். இந்த மோசடியில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக வேரியபில் டெக் நிறுவனத்தை அமலாக்கப்பிரிவு தீவிரமாக விசாரித்து வந்தனர். அதில் அந்த நிறுவனத்தை நடத்தி வந்த அமித் பரத்வாஜ், அஜய், விவேக் மற்றும் சிம்பி பரத்வாஜ் உள்ளிட்ட ஏஜென்ட்டுகள் மீது டெல்லி மற்றும் மும்பையில் வழக்கு தொடரப்பட்டது.

14 வருஷ வாழ்க்கை; கணவரை பிரிந்த தமிழ் நடிகை - காரணம் என்ன தெரியுமா?

14 வருஷ வாழ்க்கை; கணவரை பிரிந்த தமிழ் நடிகை - காரணம் என்ன தெரியுமா?

அமலாக்கத்துறை  பறிமுதல்

விசாரணையில் 285 பிட்காயின்களை அமித் பரத்வாஜியிடமிருந்து வாங்கியதாக தெரியவந்தது. இன்னும் அந்த பிட்காயின் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவிடம்தான் இருப்பதாக கூறப்படுகிறது. தன் மதிப்பு மட்டும் 150 கோடி ரூபாய் ஆகும் . இந்த பிட்காயின் மோசடி வழக்கை அமலாக்கப் பிரிவு தீவிரப்படுத்தியது.

ஷில்பா ஷெட்டியின் ரூ. 97 கோடி சொத்துக்கள் பறிமுதல்; அமலாக்கத்துறை அதிரடி சோதனை! | Shilpa Shettys Property Worth Rs 97 Crore Frozen

அதன் ஒரு பகுதியாக இந்த மோசடியில் தொடர்புடைய ராஜ் குந்த்ரா மற்றும் அவரது மனைவி ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான 97 கோடி மதிப்புள்ள சொத்துகள் அமலாக்க துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

ஷில்பா ஷெட்டி பெயரில் மும்பை ஜுகுவில் இருக்கும் வீடு, புனேயில் ராஜ் குந்த்ரா பெயரில் இருக்கும் பங்களா மற்றும் ராஜ் குந்த்ரா பெயரில் இருக்கும் ஷேர்களை அமலாக்கப் பிரிவு முடக்கினர். இதில், மோசடி பணத்தை கொண்டு ஷில்பா ஷெட்டி பெயரில் அவர் வீடு வாங்கியதாக அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.