பெற்ற மகனையே பார்க்கமுடியவில்லை; தவித்த ஷிகர் தவான் - உருக்கமான பதிவு!

Shikhar Dhawan Cricket
By Sumathi Dec 27, 2023 10:05 AM GMT
Report

ஷிகர் தவான் தன் மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பதிவு வைரலாகி வருகிறது.

ஷிகர் தவான்

இந்திய கிரிக்கெட் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான். தற்போது இந்திய அணியில் இடம் கிடைக்காமல் ஐ.பி.எல் தொடர் மற்றும் உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

shikar dhawan with son

இவர் 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆயிஷா முகர்ஜியை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆயிஷா முகர்ஜிக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது.

மனைவி டார்ச்சர் செய்ததாக உறுதி; விவாகரத்து பெற்ற ஷிகர் தவான் - வெளியான அதிர்ச்சிகரமான உண்மைகள்!

மனைவி டார்ச்சர் செய்ததாக உறுதி; விவாகரத்து பெற்ற ஷிகர் தவான் - வெளியான அதிர்ச்சிகரமான உண்மைகள்!

உருக்கமான பதிவு

இதனிடையே 2021 ஆம் ஆண்டு ஷிகர் தவான் மற்றும் அவருடைய மனைவிக்கும் விவாகரத்து ஆகிய நிலையில் தனது மகனை ஆயிஷா முகர்ஜி ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து சென்று விட்டார். இந்நிலையில் ஷிகர் தவான் தனது மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “உன்னை நேரில் பார்த்து 1 ஆண்டை கடந்து விட்டது. சமூக வலைத்தளங்கள் மூலமாகத் தொடர்பு கொண்டும் 3 மாதங்கள் ஆகிவிட்டது. இதனால் கடந்த வருடம் பிறந்தநாளின்போது உன்னுடன் வீடியோ கால் மூலம் பேசிய பதிவுடன், என் மகனே உனக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

உன்னை அதிகமாக அப்பா நேசிக்கின்றேன். கடவுள் கிருபையால் அடுத்த முறை உன்னை நேரில் சந்திக்கும் வரை நான் மனத்திடத்துடன் இருப்பேன். உன்னைக் குறித்துத் தெரிந்து கொள்ள ஆர்வமுடன் இருக்கிறேன். உன்னை மிக அதிகமாக நேசிக்கிறேன் ஜோரவர்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு அவரது ரசிகர்கள் ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.