எனக்கு ஒரே ஒரு கனவு இருந்தது - கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஷிகர் தவான்

Shikhar Dhawan Cricket Indian Cricket Team
By Karthikraja Aug 24, 2024 07:40 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஷிகர் தவான்

கடந்த 2010 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான ஷிகர் தவான், 34 டெஸ்ட், 68 டி20 மற்றும் 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 10,867 ரன்கள் எடுத்துள்ளார். 

shikhar dhawan retirement

2022 வரை இந்திய அணிக்காக ஆடிய இவர் அதன் பிறகு அணியில் இடம் பெறவில்லை. ஐபிஎல் தொடரில், டெல்லி, மும்பை ஹைதராபாத், பஞ்சாப் ஆகிய அணிகளுக்காக ஆடியுள்ளார். 

முதல் பார்வையிலே காதல் - WPL சென்னை அணியின் உரிமையாளர் ஆன சமந்தா

முதல் பார்வையிலே காதல் - WPL சென்னை அணியின் உரிமையாளர் ஆன சமந்தா

ஓய்வு

தற்போது சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஷிகர் தவான் அறிவித்துள்ளார். இது குறித்து தான் பேசிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "எனக்கு ஒரே ஒரு கனவு இருந்தது, அது இந்தியாவுக்காக விளையாட வேண்டும், நான் அதை அடைந்தும் விட்டேன். எனது பயணத்தில் பங்களித்த பலருக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். 

shikhar dhawan ipl

வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நகர்வது முக்கியமானது. அதனால் தான் நான் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன். இந்திய அணிக்காக நீண்ட நாட்கள் விளையாடிய மன நிறைவுடன் விடை பெறுகிறேன். பல மறக்க முடியாத நினைவுகளை என்னுள் கொண்டுள்ளேன்.

சோராவர்

சோராவருக்கு 11 வயதாகிறது. எனது ஓய்வு குறித்து அவன் தெரிந்து கொள்வான் என நம்புகிறேன். எனது கிரிக்கெட் பயணத்தை குறித்தும் அவன் தெரிந்து கொள்வான். என்னை ஒரு கிரிக்கெட் வீரர் என்பதை காட்டிலும், ஒரு நல்ல மனிதராகவே சோராவர் நினைத்துப் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன்" என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

ஷிகர் தவான் தன்னை விட 12 வயது மூத்தவரான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆயிஷா முகர்ஜி என்ற குத்துச்சண்டை வீராங்கனையை 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு 10 வயதில் சோராவர் என்ற மகன் உண்டு. 2021 ம் ஆண்டு இவர்கள் தங்கள் திருமண வாழ்வை முடித்துக் கொண்டனர். மகன் சோராவர் தனது தாய் ஆயிஷாவுடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.