நாகப்பாம்புகளுக்கு வீட்டில் தனி அறையே கட்டி தரும் வினோதமான கிராமம் - எங்கு தெரியுமா?
மக்கள் நாகப்பாம்புகளுடன் வீட்டில் வசிக்கும் வினோதமான கிராமம் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பாம்பு
இந்தியவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும், கிராம மக்களுக்கும் அதற்கேன ஒரு சொந்தமான மரபு மற்றும் அழகிய கதைகள் இருக்கின்றன. அந்த வகையில் மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் ஷெட்பால் என்னும் கிராமம் விசித்திரமான ஒரு விஷயத்தை கடைப்பிடிப்பது தெரியவந்துள்ளது.
அதாவது இந்த கிராமம் பாம்புகளை தெய்வமாக வழிபடுகின்றனர். அதுமட்டுமின்றி இங்குள்ள மக்கள் தங்களுடன் நிரந்தரமாக வாழ பாம்புகளுக்கு இடமும் அளிக்கிறார்கள். இங்குள்ள கிராம மக்களின் பாரம்பரியம் உலகின் மிக கொடிய பாம்புகளில் ஒன்றாக கருதப்படும்
இந்தியன் கோப்ரா என்ற நாகப்பாம்புகளுடன் வாழ்வதாக இருக்கிறது. எனவே இந்த ஷெட்பால் கிராமம் பாம்புகளின் கிராமம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் ஒவ்வொரு வீட்டிலும் பாம்புகள் இருக்கும், அங்குமட்டுமின்றி வயல்களிலும், மரங்களிலும் மற்றும் கிராம மக்களின் படுக்கையறைகளிலும் கூட சகஜமாக உலா வருகின்றனர்.
கிராமம்
இருப்பினும் இங்குள்ள மக்கள் பாம்புகளை கண்டு சிறிதும் பயப்படுவதில்லை, மாறாக அவற்றுடன் விளையாடுகிறார்கள், பால் ஊட்டிவிடுகிறார்கள். இந்த நிலையில், ஷெட்பால் கிராம மக்கள் பாம்புகளை வழிபடுவது மட்டுமின்றி,
அவற்றுக்காக தங்கள் வீடுகளில் அதற்கென பிரத்யேக அறையையும் கூட உருவாக்கி வைத்துள்ளனர். அவர்களின் குடும்ப உறுப்பினராகவே பாம்புகள் காணப்படுகின்றன. மேலும், அவை வீடுகளில் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கப்படுகின்றன.
குழந்தைகள் கூட பாம்புகளை கண்டு அஞ்சாமல் விளையாடுகிறர்கள். ஷெட்பால் கிராம மக்கள் பாம்புகள் சிவனின் அடையாளம் என்று நம்புகிறார்கள். அதனல் தான் நாகப்பாம்புகளை ஒரு கடவுளாக பாவித்து அதனை வழிப்படுவதுமட்டுமின்றி குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவும் கருதுகின்றனர்.