இந்தியாவில் பாம்புகளே இல்லாத ஒரே மாநிலம் இதுதான் - ஆச்சரிய தகவல்!

India Snake
By Jiyath Apr 19, 2024 09:31 AM GMT
Report

இந்தியாவில் பாம்புகளே இல்லாத ஒரு மாநிலம் குறித்த தகவல்.

லட்சத்தீவு

இந்தியாவில் 350-க்கும் மேற்பட்ட வகையான பாம்புகள் காணப்படுகின்றன. இதில் அதிக பாம்பு இனங்கள் காணப்படும் மாநிலம் கேரளா ஆகும். ஆனால் நாட்டில் பாம்புகளே இல்லாத ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமான லட்சத்தீவு ஆகும்.

இந்தியாவில் பாம்புகளே இல்லாத ஒரே மாநிலம் இதுதான் - ஆச்சரிய தகவல்! | Only State In India To Be Declared Snake Free

36 சிறிய தீவுகளால் ஆன லட்சத்தீவின் மொத்த மக்கள் தொகை சுமார் 64,000 மட்டுமே. இங்கு 36 தீவுகள் இருந்தாலும், அவற்றில் 10 தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்கின்றனர். லட்சத்தீவின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின்படி, லட்சத்தீவு பாம்புகள் இல்லாத மாநிலமாகும்.

ரயில் டிக்கெட் பரிசோதகருடன் தகராறு - ஆத்திரத்தில் பெண் பயணி செய்த காரியம்!

ரயில் டிக்கெட் பரிசோதகருடன் தகராறு - ஆத்திரத்தில் பெண் பயணி செய்த காரியம்!

அனுமதியில்லை 

இங்கு நாய்கள் கூட காணப்படுவதில்லையாம். பாம்பு மற்றும் நாய்கள் இல்லாத தீவாக தங்கள் தீவை வைத்துக்கொள்ள லட்சத்தீவு நிர்வாகம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் பாம்புகளே இல்லாத ஒரே மாநிலம் இதுதான் - ஆச்சரிய தகவல்! | Only State In India To Be Declared Snake Free

லட்சத்தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும், நாய்களை உடன் அழைத்து வர அனுமதிக்கப்படுவதில்லை. இங்கு காக்கை போன்ற ஏராளமாக பறவைகள் காணப்படுகின்றன. அதுவும் இங்குள்ள பிட்டி என்ற தீவில் சரணாலயமும் உள்ளது.