திடீரென Heart Attack? தீவிர சிகிச்சை பிரிவில் ஷாயாஜி ஷிண்டே

Tamil Actors
By Karthick Apr 12, 2024 10:25 AM GMT
Report

இந்திய மொழி படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் சாயாஜி ஷிண்டே.

சாயாஜி ஷிண்டே

மஹாகவி பாரதியார் வாழக்கை வரலாறை அடிப்படையாக கொண்டு உருவான படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களும் பெரிதும் பரிட்சயமானார் சாயாஜி ஷிண்டே.

shayaji-shinde-admitted-in-hospital

விக்ரமின் தூள், அனுஷ்கா அருந்ததி, தனுஷ் படிக்காதவன், விஷால் வெடி, விஜய்யின் வேட்டைக்காரன் போன்ற படங்களிலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து நல்லா வரவேற்ப்பை பெற்றுள்ளார்.

 

சினிமா'ல என்ன...அப்படி பண்ணாங்க - டக்கு'னு அழுதுடுவேன் - வேதனையை பகிர்ந்த அபிராமி

சினிமா'ல என்ன...அப்படி பண்ணாங்க - டக்கு'னு அழுதுடுவேன் - வேதனையை பகிர்ந்த அபிராமி


தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனது அபாரமான நடிப்பிற்காக பல விருதுகளையும் சாயாஜி ஷிண்டே வென்றுள்ளார்.

அண்மையில் வெளியான நெட்பிளிக்ஸ் தொடரான "கில்லர் சூப்"பிலும் மிக சிறப்பான நடிப்பை சாயாஜி ஷிண்டே வெளிப்படுத்தியிருந்தார். பல மொழி சரளமாக பேசும் சாயாஜி ஷிண்டே அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருக்கின்றார்.

shayaji-shinde-admitted-in-hospital

கடந்த சில நாட்களாக லேசான நெஞ்சு வலியை எதிர்கொண்டு சாயாஜி ஷிண்டே, மருத்துவ பரிசோதனை செய்த போது, அவருக்கு இதயத்தின் வலது புறம் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

shayaji-shinde-admitted-in-hospital

பின்னர், மருத்துவர்களின் ஆலோசனைப்படி உடனடியாக மஹாராஷ்டிராவில் அமைத்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்த தகவல் வெளியான நிலையில், ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என தெரிவித்து வருகிறார்கள்.