மாறப்போகும் நாட்டின் தலைநகர்? டெல்லி இருக்க வேண்டுமா - சசிதரூர் காட்டம்!

Indian National Congress Delhi
By Sumathi Nov 20, 2024 05:06 AM GMT
Report

நாட்டின் தலைநகராக டெல்லி இருக்க வேண்டுமா என சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லி மாசு

டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் சுவாசப் பிரச்சினைகளோடு மருத்துவமனைகளுக்கு வருவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

delhi pollution

அங்கு பல பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு 500ஐ நெருங்கியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், “உலகிலேயே மிக மோசமான காற்று மாசு கொண்ட நகரம் டெல்லி என்பது ஏற்கெனவே அதிகாரபூர்வமாக உறுதியாகிவிட்டது.

சேவிங்ஸ் அக்கவுண்டில் இந்த லிமிட்டை தாண்டாதீங்க - அப்புறம் ரெய்டு தான்!

சேவிங்ஸ் அக்கவுண்டில் இந்த லிமிட்டை தாண்டாதீங்க - அப்புறம் ரெய்டு தான்!

சசி தரூர் கேள்வி

உலகின் இரண்டாவது மாசடைந்த தாக்கா நகரைவிட 4 மடங்கு அதிகமான நச்சு டெல்லி காற்றில் உள்ளது. நமது அரசாங்கம் பல ஆண்டுகளாக இந்த நிலையை எதிர்கொண்டு வருகிறது. ஆனால், அதைப் பற்றி எதுவும் செய்யவில்லை என்பது புரிந்துகொள்ள முடியாதது.

shashi tharoor

நானும் கடந்த 2015 முதல் எம்.பி.க்கள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள், மாசு கட்டுப்பாட்டில் பங்குதாரர்களுக்காக காற்றின் தர வட்ட அட்டவணையை நடத்தினேன். ஆனால் கடந்த ஆண்டு கைவிட்டேன். ஏனெனில் எதுவும் மாறவில்லை, யாரும் கவலைப்படவில்லை.

இந்த நகரம் நவம்பர் முதல் ஜனவரி வரை வசிக்கவே முடியாத நகரமாகிவிடுகிறது. ஆண்டின் மற்ற மாதங்களில் ஏதோ பிழைக்கலாம் என்பதுபோல் உள்ளது. இத்தகையச் சூழலில், டெல்லி இனியும் நாட்டின் தலைநகராக இருக்க வேண்டுமா? எனக் குறிப்பிட்டுள்ளார்.