இலங்கை கொண்டு செல்லப்பட்ட சாந்தன் உடல் - நிறைவேறாமலேயே போன கடைசி ஆசை!

Rajiv Gandhi Tamil nadu Sri Lanka
By Sumathi Mar 01, 2024 08:54 AM GMT
Report

சாந்தனின் உடல் இலங்கை கொண்டு செல்லப்பட்டது.

சாந்தன் மறைவு 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாந்தனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. 2014-ம் ஆண்டு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

shantan

கடந்த 2022-ம் ஆண்டு ராஜீவ்காந்தி காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த அனைவரும் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். ஆனால் சாந்தன் இலங்கை தமிழர் என்பதால் திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார்.

கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட சாந்தன் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையில், அவரது கடைசி விருப்பம் அவரது தாயை பார்க்க வேண்டும் என்பதுதான்.

கடைசிவரை அம்மாவின் முகத்தை பார்க்கவில்லை - சாந்தன் மறைவு!

கடைசிவரை அம்மாவின் முகத்தை பார்க்கவில்லை - சாந்தன் மறைவு!

இலங்கையில் இறுதிச் சடங்கு 

ஆனால் அது நடக்காமல் போனது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, அவரது உடல் விமான நிலையம் கொண்டுவரப்பட்டு, இந்திய தூதரகம் மூலம் இலங்கை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. அதன்பின், சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குப்பின் இலங்கை தூதரகம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து

இலங்கை கொண்டு செல்லப்பட்ட சாந்தன் உடல் - நிறைவேறாமலேயே போன கடைசி ஆசை! | Shantans Body Taken To Sri Lanka Funeral

சாந்தன் உடல் இலங்கை கொழும்புவுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது வீட்டிற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்படவிருப்பதாக கூறப்படுகிறது.