மேஷத்தில் சனி பகவான்... 2027ல் சிக்கலை சந்திக்கும் ராசிகள் யார் யார்?
ஜோதிடத்தில் சனி பகவான் மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகும் நிலையில், ஐந்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
சனி பகவான்
ஜோதிடத்தில் நீதியின் கடவுளாக இருக்கும் சனி பகவான் தற்போது மீனத்தில் பயணித்து வரும் நிலையில், மேஷ ராசிக்கு 2027ம் ஆண்டு பெயர்ச்சி அடைகின்றார்.
சனி பகவான் அனைவரையும் தண்டிப்பார் என்று பெரும்பாலான மக்கள் நம்பும் நிலையில், அவர் உங்களை எதிர்காலத்தில் தயார்படுத்தவே செய்கின்றார்.
சனியின் தாக்கத்திற்கு பின்பு ஒரு நபர் பொறுப்பானவராக மாறுகின்றார். மேலும் உறவுகளின் நிலைத்தன்னை, நேர்மை, உண்மை இவற்றினை நாடுகின்றனர்.

ஏனெனில் உண்மையாக இருந்தால் சனியின் தாக்கம் நீண்ட ஆயுளை உறுதி செய்யும் நிலையில், அரவணைத்தும் வைக்கின்றார்.
மேஷ ராசியினருக்கு ஏழரை சனி ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், தொடர்ச்சியாக சில சிரமங்களையும் சந்திக்க நேரிடும். 2027ம் ஆண்டு சனி பகவான் எந்தெந்த ராசியினரை சோதிக்கப் போகின்றார் என்றும் யாருக்கு பலன் அளிப்பார் என்பதை தெரிந்து கொள்வோம்.
கும்பம்: கும்ப ராசியினருக்கு ஏழரை சனி முடிவிற்கு வர உள்ள நிலையில், ஓரளவு நிவாரணத்தை பெறலாம். ஆனால் கடின உழைப்பும் மிக அவசியமாகும்.
சிம்மம்: சிம்ம ராசியினருக்கு எதிராக பலரும் சதி செய்யும் நிலையில், நிதிநிலையில் சில தகராறுகளை சந்திக்கவும் நேரிடும். ஆனால் இவர்களுக்கு அஷ்டம சனி முடிவடையும் நிலையில், சில காரியங்கள் நன்றாகவே முடியும்.

தனுசு: தனுசு ராசியினர் உடல் நலம் மற்றும் குடும்பம் தொடர்பான சில மன அழுத்தத்தினை சந்திக்க நேரிடும். ஆதலால் தைரியமாக எதையும் மேற்கொள்ளவும்.
மேஷம்: மேஷ ராசியினர் சனி உறவினால் தீங்கு ஏற்படவும், வருமானத்தை குறைக்கும் மற்றும் நிதி நிறைவைத் தடுக்கவும் சில சூழ்நிலை எழும். செலவுகளும் உங்களது பட்ஜெட்டினை சீர் குலைக்குமாம்.
மீனம்: மீன ராசியினர் மன ரீதியாகவும், நிதி ரீதியாகவும் பல சிரமங்களை எதிர்கொள்வார்கள்..

யாரை சோதிப்பார்?
நேர்மையற்ற முறையில் பணம் சம்பாதிப்பவர்களும், மற்றவர்களிடமிருந்து திருடும் நபர்களையும், கடின உழைப்பு இல்லாத நபர்களுக்கும் சனி பெரும்பாலும் பிரச்சனையை உருவாக்குகின்றார்.