கருகிப்போன உடல்: அஜித் பவாரின் உடல் அடையாளம் காணப்பட்டது எப்படி?
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த விமானம் நேற்றுமுன்தினம் காலை பாராமதி பகுதியில் விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் அஜித் பவார் உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் பவாரின் இறுதிச் சடங்கு இன்று பாராமதியில் உள்ள வித்யா பிரதிஷ்டான் மைதானத்தில் முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது.
இதில் அமித் ஷா, நிதின் கட்கரி, சரத் பவார், தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

அஜித் பவார் நேற்று காலை 8.10 மணியளவில் மும்பையிலிருந்து Learjet 45 விமானத்தில் புறப்பட்டார்.
தரையிறங்க முயன்ற போது விமானிக்கு ஓடுபாதை தெளிவாக தெரியாததால் விமானம் திசை மாறி விபத்துக்குள்ளானது.
விபத்தில் விமானம் தீப்பற்றி முழுமையாக நாசமானதால், உடல்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.
இதுகுறித்து அதிகரிகாரிகள் "அஜித் பவாரின் இடது கையில் இருந்த கைக்கடிகாரம் மற்றும் உடைகள் மூலம் அவரது உடலை அடையாளம் கண்டோம்" என தெரிவித்தனர்.