இங்கு மணமகன், மணமகள் கிடைக்கும் - சீனாவின் 'திருமண சந்தை' பற்றி தெரியுமா?
மணமகன் மற்றும் மணமகளை தேர்ந்தெடுக்கும் சீனாவின் திருமண சந்தை குறித்த தகவல்.
திருமண சந்தை
சீனாவின் ஷாங்காய் நகரிலுள்ள ஒரு பூங்காவில் வார இறுதியில் திருமண சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
இங்கு செல்வதன் மூலம் மணமகன் அல்லது மணமகளை கண்டுபிடிக்கலாம். இங்கு வயது, உயரம், வேலை, வருமானம், கல்வி போன்றவற்றின் அடிப்படையில் மணமக்களை தேர்வு செய்கின்றனர்.
விளம்பரம்
இந்த தகவல்களை காகிதத்தில் எழுதி தொங்க விடுவது, மரங்களில் தொங்கவிடுவது, கூடைகளில் ஒட்டி வைப்பது அல்லது வெறுமென தரையில் வைத்து விளம்பர செய்கின்றனர். மேலும், மணமக்களின் தகவல்களை விளம்பரம் செய்ய தரகர்கள் இருப்பார்கள். அவர்கள் கமிஷன் அடிப்படையில் தகவலை கூறுகின்றனர்.
இந்த சந்தையில் 5 மாதம் விளம்பரம் செய்ய, இந்திய மதிப்பில் ரூ.265 வசூலிக்கப்படுகிறது. மேலும், தரகர்கள் ரூ.1327 பெற்று மணமக்களின் செல்போன் எண்ணை தருகின்றனர். இந்த திருமண சந்தை முதன்முதலாக கடந்த 2004-ம் ஆண்டு பெய்ஜிங்கில் உள்ள லாங்டான் பார்க்கில் நடந்தது. இது பிரபலமானதை தொடர்ந்து பல நகரங்களில் நடைபெறத் தொடங்கியது.