இளையராஜாக்கு டஃப் கொடுத்த வாட்ஸன்; அவர் பாடலை கிட்டாரில் வாசித்து அசத்தல் - வைரல் Video!
இளையராஜாவின் 'என் இனிய பொன் நிலவே' என்ற பாடலை கிட்டாரில் வாசித்து அசத்தியுள்ளார் முன்னாள் ஆஸி. வீரர் ஷேன் வாட்சன்.
ஷேன் வாட்சன்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆவார் ஷேன் வாட்சன். ஆல் ரவுண்டரான இவர் கடந்த 2002ம் ஆண்டு முதல் 2016ம் வரை ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியுள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்காக விளையாடிய இவர் இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்தார். இதனால் தமிழ் ரசிகர்களுக்கு நெருக்கமானவராக மாறிப்போனார் ஷேன் வாட்சன்.
கடந்த 2019ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஐபிஎல் பைனலில் காலில் பலத்த காயம் அடைந்தபோதும், ரத்த வெள்ளத்தில் அணிக்காக போராடிய செயலுக்காக வாட்சன் இன்றளவும் தமிழக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
'என் இனிய பொன் நிலாவே'
அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வுபெற்ற ஷேன் வாட்சன் தற்போது நடந்துவரும் உலகக் கோப்பை தொடரில் வர்ணனையாளராக இருந்துவருகிறார். இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் விளம்பரத்தின் ஒரு பகுதியாக நடந்த நேர்காணலில் ஷேன் வாட்சன் பங்கேற்றிருந்தார்.
அப்போது அவரிடம் ' உங்களுக்கு வேறு ஏதேனும் சிறப்பு திறமை இருக்கிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது. உடனே ஷேன் வாட்சன் அருகில் இருந்த கிட்டாரை எடுத்து ‘மூடுபனி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இளையராஜாவின் புகழ்பெற்ற ‘என் இனிய பொன் நிலாவே’ என்ற பாடலை மாஸாக வாசித்துக் காட்டினார். இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Shane Watson plays the prelude from Ilaiyaraaja's 'En Iniya Pon Nilave' on the guitar ❤️ pic.twitter.com/ih2hsZuRDz
— Balaji Duraisamy (@balajidtweets) October 23, 2023