பெரிய தப்பு பண்ணிட்டீங்க தோனி...இப்படி செஞ்சிருக்க கூடாது...கடுப்பான ஷேன் வாட்சன்
ஐபிஎல் தொடரில் ஜடேஜா விஷயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கேப்ட தோனி செய்த தவறு குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தாண்டு மீண்டும் மோசமான முறையில் வெளியேறியுள்ளது. அந்த அணி 10 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள நிலையில் மீதமுள்ள 4 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் ப்ளே ஆஃப் செல்வது கடினம் என்பதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
இந்த சீசன் தொடங்குவதற்கு சென்னை அணியின் கேப்டன் பொறுப்பு ஜடேஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவரது தலைமையிலான அணி தொடர் தோல்வியில் சிக்கி தவித்து வெளியேறும் நிலையில் இருந்த போது மீண்டும் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் நிலைமை கையைவிட்டு சென்ற பின்னர் தோனியால் கூட சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறுவதை தடுக்க முடியவில்லை.
இந்நிலையில் சென்னை அணியில் ஜடேஜா தான் கேப்டன் என அறிந்தவுடன் நான் அதிர்ச்சியடைந்தேன். காரணம் அணியிலும், களத்திலும் தோனிக்கு கிடைக்கும் மரியாதை அனைவருக்கும் தெரியும். அதனை ஜடேஜா எப்படி சமாளிக்க முடியாமல் போனார் என்பது எனக்கே கவலையாக உள்ளது.
அதேசமயம் ராஜஸ்தான் அணி கேப்டன் பதவியில் இருந்து நானும் விலகியுள்ளேன். அழுத்தமான நிலையில் அப்பதவியில் இருந்து விலகுவது எப்படி வலிக்கும் என்பதை நானும் அறிவேன். இந்த முடிவை எடுத்ததற்காக ஜடேஜாவுக்கு பாராட்டு தெரிவித்தாக வேண்டும்.
ஆனால் தோனியை மையப்படுத்தி தான் ஒட்டுமொத்த சென்னை அணியும் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவர் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் மாற்றலாம். இன்னொரு கோப்பையை கூட வெல்லலாம். அதேசமயம் அவருக்காக உருவாக்கப்பட்டதை ஜடேஜாவால் எப்படி சமாளிக்க முடியும். அந்த வகையில் தோனி மற்றும் சென்னை அணி நிர்வாகம் தவறு செய்துவிட்டது என வாட்ஸன் கூறியுள்ளார்.