IND vs SA - டெஸ்ட் - முன்னணி வேகப்பந்துவீச்சாளர் விலகல்...! BCCI அறிவிப்பு..!
இந்திய அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
தென்னாபிரிக்கா சுற்றுப்பயணம்
இந்தியா அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அதில் டி 20 தொடர் 1-1 என்ற கணக்கில் டிராவாகியது. அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டி நாளை துவங்கவுள்ளது.
ஒருநாள் தொடருக்கான அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்து நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
BCCI அறிவிப்பு
இந்நிலையில் தான், டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி காயம் காரணமாக விலகியுள்ளார். கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் சிறந்த முறையில் பந்து வீசிவரும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நீக்கப்பட்டுள்ளதாக BCCI அறிவித்துள்ளது.
அவருக்கு பதிலாக மாற்று வீரரை BCCI அறிவிக்கப்படவில்லை.முன்னதாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக தீபக் சஹார் விலகிய நிலையில் அவருக்கு மாற்று வீரராக ஆகாஷ் தீப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.